பெர்த்தில் சூரசம்ஹாரம் செய்த சூர்யகுமார்!
68 ஓட்டங்கள் எடுத்த சூர்யகுமார் யாதவிற்கு இது 11வது சர்வதேச அரைசதம் ஆகும்
லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளுடன் ஒரு கேட்ச் பிடித்து மிரட்டினார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்கள் விளாசினார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரது தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித், கே.எல்.ராகுல் ஒரே ஓவரில் நடையை கட்டினார்.
பின்னர் வந்த கோலி இரண்டு பவுண்டரிகள் விளாசினார். ஆனால் அவரும் இங்கிடி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து பர்னெல்லின் தாக்குதலில் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய சூர்யகுமார் அரைசதம் கடந்தார்.
40 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசிய அவர் 8வது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்தது.
Ninth score of fifty or more in T20Is in 2022 for Suryakumar Yadav ?#INDvSA | #T20WorldCup | ?: https://t.co/GI5MZQJSjA pic.twitter.com/65ZadokQj8
— ICC (@ICC) October 30, 2022
தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் இங்கிடி 4 விக்கெட்டுகளையும், பர்னெல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
India lose their fourth as South Africa gain control in Perth ?#INDvSA | #T20WorldCup | ?: https://t.co/GI5MZQJSjA pic.twitter.com/GkOdxshU2g
— ICC (@ICC) October 30, 2022