அற்புதமான ஆட்டம்! கோலி, ரோகித் மற்றும் சூர்யகுமார் அரைசதம் விளாசல்
53 ஓட்டங்கள் எடுத்த ரோகித் சர்மாவுக்கு இது 29வது அரைசதம் ஆகும்
பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசியாக கோலி தொடர்ச்சியாக இரண்டாவது அரைசதம் அடித்துள்ளார்
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் கோலி, ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணி 179 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாட்டம் செய்தது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய கே.எல்.ராகுல் 9 ஓட்டங்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் கைகோர்த்த கோலி, ரோகித் இணை பொறுமையுடன் ஓட்டங்களை சேர்த்தது.
அவ்வப்போது ரோகித் சர்மா சிக்ஸர் விளாசவும் தவறவில்லை. இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 67 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து. அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய ரோகித் சர்மா 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Rohit Sharma departs shortly after reaching his half-century ?#T20WorldCup | #NEDvIND | ?: https://t.co/9FPx3tOBBe pic.twitter.com/XUMqSXzq3x
— ICC (@ICC) October 27, 2022
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளை விரட்டினார். இவர்களது கூட்டணியில் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. நிதானமாக ஆடிய கோலி அரைசதம் கடந்தார்.
Virat Kohli brings up back-to-back fifties ?#T20WorldCup | #NEDvIND | ?: https://t.co/9FPx3tOBBe pic.twitter.com/IAUuu33nrZ
— ICC (@ICC) October 27, 2022
அவரைத் தொடர்ந்து அதிரடியாக 25 பந்துகளில் சூர்யகுமாரும் அரைசதம் அடித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் சேர்த்தது.
விராட் கோலி 44 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
Suryakumar Yadav finishes the India innings in style ⚡
— ICC (@ICC) October 27, 2022
Will Netherlands chase the target?#NEDvIND |?: https://t.co/2eJmEzrmPu pic.twitter.com/8ElXhO8KdW