நியூசிலாந்தை புரட்டியெடுத்த ஷர்த்துல் தாக்கூர்! சிதறிய விக்கெட்டுகள்
ஷர்த்துல் தாக்கூர் 8 ஓவர்கள் வீசி ஒரு மெய்டனுடன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்
இந்திய அணியில் திரிபாதி 31 ஓட்டங்களும், சாம்சன் 29 ஓட்டங்களும் எடுத்தனர்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி வீரர் ஷர்த்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்தது.
நியூசிலாந்து ஏ அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பௌஸ்-ஐ இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்த்துல் தாக்கூர் போல்டாக்கினார்.
அதன் பின்னர் விக்கெட் கீப்பர் கிளேவரையும் அவர் ஆட்டமிழக்க செய்தார். அதனைத் தொடர்ந்து ராபர்ட் ஓ டொன்னேல் (22) மற்றும் ரிப்போன் (61) ஆகியோர் விக்கெட்டுகளையும் ஷர்த்துல் தாக்கூர் கைப்பற்றினார்.
ஷர்த்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூசிலாந்து அணி 167 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா ஏ அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரஜத் படிதார் 45 ஓட்டங்களும், கெய்க்வாட் 41 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பீக், பிஷர் மற்றும் ரிப்போன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Shardul Thakur picked up a four-for against New Zealand A, as they were bowled out 167!#INDAvNZA
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 22, 2022