சிக்ஸர் மழை பொழிந்த கோலி! சதம் விளாசி மிரட்டல்.. ஆப்கானை பந்தாடிய இந்தியா
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதம் விளாசியதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்
இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் மிரட்டலாக பந்துவீசி 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாயில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. ருத்ரதாண்டவம் ஆடிய கோலி சுமார் 1020 நாட்களுக்கு பிறகு சர்வதேச சதம் அடித்தார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 61 பந்துகளில் 122 ஓட்டங்கள் விளாசினார்.
The 71st ? is here!
— ICC (@ICC) September 8, 2022
A hundred after nearly three years for Virat Kohli ?#INDvAFG | #AsiaCup2022 | Scorecard: https://t.co/z8iw8dn85Q pic.twitter.com/qyp1cHiOsX
டி20 கிரிக்கெட்டில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் இது அவருக்கு 71வது சதம் ஆகும். இந்திய அணியில் கோலி பார்ட்னர்ஷிப் கொடுத்த கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார்.
The highest score by an Indian in T20Is ??
— ICC (@ICC) September 8, 2022
More ?? https://t.co/SbYx5b9TSz#AsiaCup2022 | #INDvAFG pic.twitter.com/KoAelt33TV
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களே எடுத்ததால், இந்திய அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக இப்ராகிம் ஸட்ரான் 64 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
A stunning five-wicket haul for Bhuvneshwar Kumar ?#INDvAFG | #AsiaCup2022 | Scorecard: https://t.co/z8iw8dn85Q pic.twitter.com/JUwtuQriMg
— ICC (@ICC) September 8, 2022