அஸ்வின், ஜடேஜாவின் மாயாஜால சுழலில் வீழ்ந்த அவுஸ்திரேலியா!
டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
சுழற்பந்துவீச்சில் மிரட்டல்
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 263 ஓட்டங்களும், இந்தியா 262 ஓட்டங்களும் எடுத்தன. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து 115 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.
கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
@PTI
இந்திய அணி வெற்றி
அடுத்து களமிறங்கிய கோலியும் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, புஜாரா மற்றும் ஸ்ரீகர் பரத் கூட்டணி வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.