295 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! அவுஸ்திரேலியாவில் வரலாறு படைத்த இந்திய அணி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்தியா 487
பெர்த்தில் நடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 104 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 487 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ததது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 535 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Big wicket for India!
— cricket.com.au (@cricketcomau) November 25, 2024
Siraj with a beauty! #AUSvIND pic.twitter.com/NEJykx9Avj
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பும்ரா, சிராஜ் இருவரும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர்.
டிராவிஸ் ஹெட் நெருக்கடி
இவர்களின் பந்துவீச்சில் கவாஜா (4), லபுஷேன் (3), ஸ்மித் (17) ஆகிய முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
எனினும் டிராவிஸ் ஹெட் நெருக்கடி கொடுத்தார். அரைசதம் அடித்த அவரை 89 ஓட்டங்களில் பும்ரா வெளியேற்றினார்.
மரணத்தின் விளிம்புக்கு சென்றுவந்த ரிஷாப் பண்ட்..தன் உயிரை காப்பாற்றிய இருவருக்கு அளித்த பரிசு..என்ன தெரியுமா?
அதன் பின்னர் 47 ஓட்டங்கள் எடுத்திருந்த மிட்செல் மார்ஷ் போல்டாகி பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் தனது மிரட்டலான சுழலில் ஸ்டார்க் (12) மற்றும் லயன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Instant classic! #AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/7xI6HVzDan
— cricket.com.au (@cricketcomau) November 25, 2024
இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த அலெக்ஸ் கேரியின் (36) விக்கெட்டை ஹர்ஷித் கைப்பற்ற, அவுஸ்திரேலியா 238 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |