மைதானத்தை நெருப்பு வைத்து வெடிக்க வைத்தனர்! இந்திய அணியின் 2வது வெற்றி - ஜெய்ஷாவின் பதிவு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.
மூவர் அரைசதம்
திருவனந்தபுரத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 235 ஓட்டங்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் (53), ருதுராஜ் கெய்க்வாட் (58), இஷான் கிஷன் (52) ஆகியோர் அரைசதம் விளாசினர்.
சரவெடியாய் வெடித்த ரிங்கு சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார். அவுஸ்திரேலிய அணியின் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
AP Photo
அதன் பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 45 (25) ஓட்டங்களும், மேத்யூ வேட் 42 (23) ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஜெய்ஷா பாராட்டு
இந்த வெற்றி குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்ட பதிவில், 'அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எங்களது Dynamic தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் மைதானத்திற்கு தங்கள் வெடிக்கக்கூடிய அரைசதங்களால் தீ வைத்தனர்.
ஆடுகளத்தை மூன்றாவது இடத்தில் களமிறங்கிய இஷன் கிஷன் பிடித்து கம்பீரமான இன்னிங்சை விளையாடினார் மற்றும் ரிங்கு சிங் finishing ரோலில் எல்லை தாண்டிய ஆட்டத்தை பார்ப்பதற்கு மிரட்டலாக இருந்தது.
பந்துவீச்சு, பீல்டிங்கில் தற்காப்பு குறையவில்லை. இந்த ஆதிக்க வெற்றிக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! அனைவரின் பார்வையும் 3வது டி20 மீது உள்ளது. அங்கு நாங்கள் தொடரைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
Sportzpics
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |