கடைசி ஓவரை மட்டும் வீசி 3 விக்கெட்டுகள்.. ஷமியின் அனல் பந்துவீச்சில் இந்திய அணி மிரட்டல் வெற்றி
அவுஸ்திரேலிய கேப்டன் பின்ச் 54 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்தார்
முகமது ஷமி ஒரு ஓவரை வீசி, 4 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் குவித்தது.
ராகுல் 57 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி புயல் வேகத்தில் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது.
மிட்செல் மார்ஷ் 18 பந்துகளில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 16 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆரோன் பின்ச் ருத்ர தாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அணியின் ஸ்கோர் 171 ஆக இருந்தபோது பின்ச் (76) போல்டானார். அவரைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே டிம் டேவிட் ரன் அவுட் முறையில் வெளியேறினார். கடைசி ஓவரை வீச வந்த ஷமி, அவுஸ்திரேலிய அணியின் வெற்றிப்பாதைக்கு முட்டுக்கட்டை போட்டார்.
Twitter (@cricketcomau)
தனது முதல் ஓவரை வீசிய ஷமி, அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸை ஆட்டமிழக்க செய்தார். அஷ்டோன் அகர் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் விக்கெட் கீப்பர் இங்கிலிஸ் போல்டானார்.
கடைசி விக்கெட்டான ரிச்சர்ட்ஸனை கடைசி பந்தில் ஷமி போல்டாக்கினார். இதனால் அவுஸ்திரேலிய அணி 180 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Twitter (@ICC)
Twitter (@BCCI)