கடைசி பந்துவரை பரபரப்பு! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இருவர்..த்ரில் வெற்றி
அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் தனது குழுவில் முதலிடம் பிடித்துள்ளது
அடிலெய்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி ராகுல் (50), கோலி (64) ஆகியோரின் அரைசதத்தின் மூலம் 184 ஓட்டங்கள் குவித்தது. வங்கதேச அணியின் தரப்பில் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
t20worldcup
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் அதிரடியில் மிரட்டினார். 21 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
Play to resume soon in Adelaide ?
— ICC (@ICC) November 2, 2022
The revised target for Bangladesh is 151 from 16 overs ?#T20WorldCup | #INDvBAN | ?: https://t.co/vDRjKeeGvf pic.twitter.com/J0qqus3Tmg
மழை நின்ற பின் D/L விதிமுறைப்படி 16 ஓவர்களில் 151 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஷகிப், அபிஃப், யாசிர் அலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பெரிய அளவில் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாததால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் நினைத்தபோது, தஸ்கின் அகமது மற்றும் நூருல் ஹசன் இருவரும் அதிரடி ஆட்டத்தால் பயத்தை ஏற்படுத்தினர்.
Shakib falls ?
— ICC (@ICC) November 2, 2022
Bangladesh's task gets tougher ?#T20WorldCup | #INDvBAN | ?: https://t.co/vDRjKdX56F pic.twitter.com/RrQZODp3tY
வங்கதேசத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் தஸ்கின் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் நூருல் சிக்ஸர் விளாசினார். மூன்றாவது பந்து டாட் ஆனது.
அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த நூருல், 5வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் அந்த பந்தை சிறப்பாக வீசியதால் வங்கதேசத்தால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நூருல் ஹாசன் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 25 ஓட்டங்களும், தஸ்கின் அகமது 7 பந்துகளில் 12 ஓட்டங்களும் எடுத்தனர்.
Bangladesh lose two quick wickets after the rain break ?#T20WorldCup | #INDvBAN | ?: https://t.co/vDRjKeeGvf pic.twitter.com/eOrgwV0y8r
— ICC (@ICC) November 2, 2022
Bangladesh gave it their all, but India reign in Adelaide ?#T20WorldCup | #INDvBAN | ?: https://t.co/vDRjKeeGvf pic.twitter.com/EOMtLYt3zb
— ICC (@ICC) November 2, 2022