ஓவர் வீசி விக்கெட் வீழ்த்திய கோலி, ரோகித்! 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
பெங்களூருவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயர் (128), கே.எல்.ராகுல் (102) ஆகியோரின் சதம் மற்றும் ரோகித் (61), கோலி (51), கில்லின் (51) அரைசதத்தினால் 410 ஓட்டங்கள் குவித்தது.
AP
அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் அக்கர்மென் 35 ஓட்டங்களும், மேக்ஸ் ஓ டௌட் 30 ஓட்டங்களும், ஏங்கெல்ப்ரெட் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேப்டன் எட்வாட்ர்ஸை (17) விராட் கோலி பந்துவீசி ஆட்டமிழக்க செய்தார். ஆல்ரவுண்டர் வீரர் லீடி (12) விக்கெட்டை பும்ரா கைப்பற்றிய நிலையில், நிதமானுரு அதிரடியில் மிரட்டினார்.
cricketworldcup.com
சிக்ஸர்களை அவர் ஒருபுறம் தெறிக்கவிட மறுமுனையில் நெதர்லாந்தின் விக்கெட்டுகள் சரிந்தன. யாரும் எதிர்பாராத வகையில் 48வது ஓவரை ரோகித் சர்மா வீசினார்.
அவரது ஓவரில் 48 ஓட்டங்களில் இருந்த நிதமானுரு சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததால், நெதர்லாந்து அணி 250 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இந்திய அணியின் தரப்பில் பும்ரா, குல்தீப், ஜடேஜா, மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கோலி மற்றும் ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
Twitter (BCCI)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |