சுழற்பந்துவீச்சில் மிரட்டிய அஸ்வின், அக்சர் படேல்! உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி
புவனேஷ்வர்குமார் 3 ஓவர்கள் வீசி 2 மெய்டன் மற்றும் 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
அஸ்வின் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தும், அக்சர் 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்
சிட்னியில் நடந்த நெதெர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னியில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. ரோகித் சர்மா 53 ஓட்டங்களும், விராட் கோலி 62 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
நெதர்லாந்து தரப்பில் கிளாசென், மீக்கெரென் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 11 ஓட்டங்களில் முதல் விக்கெட்டையும், 20 ஓட்டங்களில் இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது.
சுழற்பந்து வீச்சு கூட்டணி அமைத்த அக்சர் பட்டேல், அஸ்வின் மாறி மாறி விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மறுபுறம் புவனேஷ்வர் குமார் ஓவர்களை மெய்டன் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் நெதர்லாந்து அணி 89 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மீக்கெரென் 6 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ஓட்டங்கள் விளாசினார்.
AFP
18வது ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 20 ஓவரில் நெதர்லாந்து அணி 123 ஓட்டங்களே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின், அக்சர், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
A comprehensive win for India at the SCG against Netherlands ??#NEDvIND | #T20WorldCup | ?: https://t.co/9FPx3tOBBe pic.twitter.com/1a9Nz0sOiM
— ICC (@ICC) October 27, 2022