கடைசி பந்தில் சாதித்த அஸ்வின்! பாகிஸ்தானை துவம்சம் செய்த கோலி.. ஆர்ப்பரித்த மைதானம்
விராட் கோலி 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார்
அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்ட கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மெல்போர்னில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் குவித்தது.
ஷான் மசூட் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களும், இப்திகார் அகமது 51 ஓட்டங்களும் விளாசினர்.
A big wicket calls for a big celebration ?
— ICC (@ICC) October 23, 2022
Arshdeep Singh and India are #InItToWinIt ? @royalstaglil | #T20WorldCup pic.twitter.com/pSM1mzX8FQ
இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Fifty and gone!
— ICC (@ICC) October 23, 2022
Iftikhar Ahmed's entertaining stay at the crease comes to an end ☝#T20WorldCup | #INDvPAK | ? https://t.co/H9EE5QNfGD pic.twitter.com/mSDaAfVlga
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர். ஆனால் விராட் கோலி விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பரபரப்பான இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க போட்டியில் பதற்றம் நிலவியது. கடைசி பந்தை சந்தித்த தமிழக வீரர் அஷ்வின், சாமர்த்தியமாக வைடு வாங்கினார்.
A fine half-century from Virat Kohli ?
— ICC (@ICC) October 23, 2022
Can he take India home? ?#T20WorldCup | #INDvPAK | ? https://t.co/H9EE5QNfGD pic.twitter.com/DtRzm5Mjvv
பின்னர் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டபோது தூக்கி அடித்த அஸ்வின் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதிவரை களத்தில் நின்ற கோலி 53 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 40 ஓட்டங்கள் எடுத்தார்.
What a game of cricket! ??
— ICC (@ICC) October 23, 2022
India win a humdinger at the MCG ? #T20WorldCup | #INDvPAK | https://t.co/H9EE5QNfGD pic.twitter.com/kbgItlGRhE