புயல்வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங்! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
Paarlயில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது.
கடைசி ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்தது.
தென் ஆப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் ராஜத் படிதார் 22 (16) ஓட்டங்களும், சாய் சுதர்சன் 10 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
BCCI (Twitter)
சஞ்சு சாம்சன் சதம்
அதன் பின்னர் கே.எல்.ராகுல் 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன் இணைந்து திலக் வர்மா நிதமான ஆட்டத்தை ஆடினார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
அரைசதம் விளாசிய திலக் வர்மா 52 ஓட்டங்களில் அவுட் ஆக, சஞ்சு சாம்சன் முதல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் அவர் 114 பந்துகளில் 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 296 ஓட்டங்கள் குவித்தது.
Reuters
அர்ஷ்தீப் மிரட்டல் பந்துவீச்சு
அதனைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக்ஸை 19 ஓட்டங்களில் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார்.
பின்னர் வந்த வான் டெர் டசனை 2 ரன்னில் அக்சர் படேல் போல்டாக்கினார். எனினும் மார்க்கரம், ஜோர்சி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வாஷிங்டன் சுந்தர் இந்த கூட்டணியை உடைத்தார். அவரது ஓவரில் மார்க்கரம் 36 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
BCCI (Twitter)
ஜோர்சி அரைசதம்
அடுத்து அரைசதம் விளாசிய ஜோர்சி 81 (87) ஓட்டங்களில் அர்ஷ்தீப் சிங் ஓவரில் lbw முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
Twitter (@ProteasMenCSA)
குறிப்பாக அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அதகளம் செய்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 45.5 ஓவரில் 218 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் இந்திய அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) 4 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதையும், அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |