அமெரிக்காவை வீழ்த்தி கம்பீரமாக 'சூப்பர் 8' சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி! சூர்யகுமார் மிரட்டல் அரைசதம்
நியூயார்க்கில் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தன.
எனினும் ஸ்டீவன் டெய்லர் 24 ஓட்டங்களும், நிதிஷ் குமார் 27 (23) ஓட்டங்களும் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் கைப்பற்ற, அமெரிக்க அணி 110 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
New York ?
— ICC (@ICC) June 12, 2024
Arshdeep Singh's scintillating four-wicket haul restricts USA to 110/8 at the halfway mark ?#T20WorldCup | #USAvIND | ?: https://t.co/TbtRddWHNK pic.twitter.com/AzA79zLe26
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரோஹித் சர்மாவும் (3) ஆட்டமிழக்க, ரிஷாப் பண்ட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
The battle is ? at New York! ?
— ICC (@ICC) June 12, 2024
Saurabh Netravalkar's double strike leaves India at 33/2 at the end of the Powerplay.#T20WorldCup | #USAvIND | ?: https://t.co/LU9KQRqJAg pic.twitter.com/rQrZmCf3W8
அதன் பின்னர் கைகோர்த்த சூர்யகுமார், ஷிவம் தூபே கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணி 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
Suryakumar Yadav's 18th T20I half-century is an @MyIndusIndBank Milestone Moment ?#USAvIND #T20WorldCup pic.twitter.com/ObXweIt3F3
— ICC (@ICC) June 12, 2024
சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார். தூபே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
Interestingly poised in New York! ?
— ICC (@ICC) June 12, 2024
India need 35 runs to win from the last five overs with Suryakumar Yadav and Shivam Dube at the crease.#T20WorldCup | #USAvIND | ?: https://t.co/8P82PmbMjy pic.twitter.com/ftdy9ICrBe
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |