ஜிம்பாப்வேயை மொத்தமாக காலி செய்த மூவர் கூட்டணி! தவான், கில்லின் தரமான ஆட்டம்
இந்திய வீரர் அக்சர் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது அரைசதம் அடித்த கில், 7 போட்டிகளில் 336 ஓட்டங்கள் குவித்துள்ளார்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ஓட்டங்களும், ங்கரவா 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Twitter
இந்திய அணி தரப்பில் தீபக் சாகர், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 192 ஓட்டங்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 113 பந்துகளில் 81 ஓட்டங்களும், சுப்மன் கில் 72 பந்துகளில் 82 ஓட்டங்களும் விளாசினர்.
That's that from the 1st ODI.
— BCCI (@BCCI) August 18, 2022
An unbeaten 192 run stand between @SDhawan25 & @ShubmanGill as #TeamIndia win by 10 wickets.
Scorecard - https://t.co/P3fZPWilGM #ZIMvIND pic.twitter.com/jcuGMG0oIG
#1stODI | INNINGS BREAK: ?? bowled out for 189 in 40.3 overs
— Zimbabwe Cricket (@ZimCricketv) August 18, 2022
Richard Ngarava and Brad Evans put on 70-run together, the highest ninth-wicket partnership for ?? against India#ZIMvIND | #KajariaODISeries | #VisitZimbabwe pic.twitter.com/H9bQa4giSa