உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல் அணியாக நுழைந்த இந்தியா! சாதனை மழையில் ஷமி
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி இமாலய வெற்றி
வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ICC
இதன்மூலம் 7 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் இந்திய அணி மட்டுமே தற்போது அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
ஒரே போட்டியில் பல சாதனைகள்
உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் (44) கைப்பற்றிய ஜாகீர் கானின் சாதனையை ஷமி (45) முறியடித்தார். அதேபோல் அதிகமுறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் 5 விக்கெட்கள் (3) வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ஷமி சமன் செய்தார்.
அத்துடன் இந்திய அணிக்காக அதிகமுறை (4) ஐந் து விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும், ஷமி படைத்தார்.
Twitter (BCCI)
ICC/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |