ரோகித், கில் மற்றும் சூர்யகுமார் அவுட்! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய அவுஸ்திரேலிய வேகப்புயல்
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
அவுஸ்திரேலியா பந்துவீச்சு
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்திலேயே சுப்மன் கில்லை வெளியேற்றினார் ஸ்டார்க்.
@Surjeet Yadav/AP
செக் வைத்த ஸ்டார்க்
அதனைத் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விரட்டிய ரோகித் சர்மா, 13 ஓட்டங்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவை முதல் பந்திலேயே ஸ்டார்க் அவுட்டாக்கினார்.
The review doesn't save KL Rahul...
— cricket.com.au (@cricketcomau) March 19, 2023
Starc has the first FOUR wickets!! #INDvAUS
Live match centre: https://t.co/LXGrkQy5JJ pic.twitter.com/VljMjbEwhM
இதனால் இந்திய அணி 32 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 9 ஓட்டங்களில் ஸ்டார்க் ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
@ICC
@AP image