இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி: மழை குறுக்கிட்டதால் ரத்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டி20 போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டி20 போட்டி ரத்து
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்த வெலிங்டன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டத்திற்கான நாணய சுழற்சி கூட நடத்தப்படாமல் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.
New Zealand will take on India in a three-match T20I series, beginning 18 November.
— ICC (@ICC) November 16, 2022
All the squad news ➡️ https://t.co/sVp9WmOrXL#NZvIND pic.twitter.com/ZQOeNwD5kV
இரு அணிகளும் மோதும் அடுத்த டி20 கிரிக்கெட் போட்டி வரும் 20 திகதி பே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்க உள்ளது.