அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்..அரைசதம் விளாசி அணியை மீட்ட ஷ்ரேயாஸ் ஐயர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 160 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்
பெங்களுருவில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கெய்க்வாட் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
Twitter (@cricbuzz)
அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 21 ஓட்டங்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ஓட்டங்களிலும், ரிங்கு சிங் 6 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Lofted with ease ✨
— BCCI (@BCCI) December 3, 2023
Vice-captain Shreyas Iyer and Jitesh Sharma have pulled back the momentum ??#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/90Zw3tvYbd
BCCI (Twitter)
161 ஓட்டங்கள் இலக்கு
இதனால் இந்திய அணி சரிவுக்கு உள்ளானது. ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
அவருக்கு உறுதுணையாக ஜிதேஷ் ஷர்மா 16 பந்துகளில் 24 ஓட்டங்களும், அக்சர் படேல் 21 பந்துகளில் 31 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ட்வர்ஷுய்ஸ், பெஹ்ரேண்டோர்ஃப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Twitter (BCCI)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |