9 ஆண்டுகளுக்குப் பின் சாதனைப் படைத்த இந்திய அணி - ரசிகர்கள் மகிழ்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இந்திய அணி சாதனைப் படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களுக்கும் குறைவாக 237 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி 193 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 9 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
அதாவது தங்களது சொந்த மண்ணில் கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் தான் இந்திய அணி 240 ரன்களுக்கும் குறைவான இலக்கினை நிர்ணயித்து ஒருநாள் போட்டியில் எதிரணியை சுருட்டி வெற்றி பெற்றது.
மேலும் ரோகித் சர்மா தலைமை பதவியேற்ற பின் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.