இலங்கை பொருளாதார நெருக்கடியை குறைக்க... இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு?
இலங்கையில் டி20 போட்டிகள் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. அந்த போட்டிகள் கொழும்பில் நடந்தது. அப்போது அந்த தொடர்களின் மூலம் இலங்கை கிரிக்கெட் வாரியம் 14.5 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அந்நாட்டுக்கு உதவ இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Photo Credit: IANS
அதாவது, இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கையில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கு முன்பாகவோ அல்லது பின்னரோ இந்த போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது.
ஆனால், ஆகத்து-செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இலங்கை பரிசீலித்து வருவதால், இந்தியாவுடனான டி20 போட்டிகளும் அங்கேயே நடத்தப்படலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்படும் இடத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், ஆனால் பெரும்பாலும் அது ஐக்கிய அரபு அமீரகம் ஆக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Photo Credit: Wikipedia
Photo Credit: BCCI