அவுஸ்திரேலிய அணியை திணறடித்த இந்திய பந்துவீச்சாளர்கள்: 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சொதப்பிய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தின் இன்று பிற்பகல் தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Well Bowling guys #TeamIndia @BCCI specially @mdsirajofficial & @MdShami11 #INDvsAUS pic.twitter.com/7jBnfrnkih
— Munaf Patel (@munafpa99881129) March 17, 2023
அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 35.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்கள் சேர்த்து இருந்தது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ஓட்டங்கள் குவித்து இருந்தார், இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷமி மற்றும் சிராஜ் தலா மூன்று விக்கெட்களையும், ரவீந்தர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்கள்.
இந்தியா திரில் வெற்றி
இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்து இருந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முன்கள ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், சுப்மன் கில், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
ஆனால் பின்னர் வந்த கே எல் ராகுல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
Expecting KL Rahul to play some these kind of shots today against Australia.?#INDvsAUS #KLRahul#IndianCricketTeampic.twitter.com/IZsazZ2wNT
— Mohit Parihar ?? (@MohitParihar28) March 17, 2023
கே எல் ராகுல் அதிகபட்சமாக 91 பந்துகளில் 75 ஓட்டங்களையும், ஜடேஜா 69 பந்துகளில் 45 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் இந்திய அணி 39.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.