காபாவில் பரபரப்பாக நடந்த ஆட்டம்..மழையால் டிராவில் முடிந்த டெஸ்ட்
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
அவுஸ்திரேலியா டிக்ளேர்
காபாவில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது.
முதலில் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 445 ஓட்டங்களும், இந்தியா 260 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 275 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.
டிராவில் முடிந்த டெஸ்ட்
இந்திய அணி 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை நீடித்ததால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
152 ஓட்டங்கள் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (Travis Head) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |