13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா., பல சாதனைகள் பதிவு
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
மெல்போர்னில் இந்திய அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ளது.
கடைசி செஷனில் இந்திய அணி 20.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.
340 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 155 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மேலும், இன்றய போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா (SENA) நாடுகளில் பும்ரா அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மாறியுள்ளார். பும்ரா 9 முறை 5+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆல்ரவுண்டர் கபில் தேவ் இந்த சாதனையை 7 முறை செய்துள்ளார். அவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
ஒரு வருடத்தில் ( 2024) இந்தியாவுக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 1478 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 2010 சீசனில் 1562 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் (இந்திய பந்துவீச்சாளர்கள்)
ஜஸ்பிரித் பும்ரா 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் (BGT) இதுவரை 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
1979-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 32 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில்தேவ் முதலிடத்தில் உள்ளார்.
இருப்பினும், இந்த பட்டியலில் கபில் தேவை முந்துவதற்கு பும்ராவுக்கு வாய்ப்பு உள்ளது. அவர் தனது கடைசி பிஜிடி போட்டியை சிட்னியில் விளையாடுவார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னில் இந்தியா தோல்வி
13 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டு படுதோல்வி அடைந்தது. 2014 ஆம் ஆண்டில், அணி கங்காருக்களுக்கு எதிராக டிரா செய்தது.
ரோஹித் சர்மா, கோலி மோசமான ஆட்டம்
2024-ல் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த இந்திய பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா உள்ளார். அவர் இந்த ஆண்டில் 16 முறைக்கு மேல் 10 ஓட்டங்களுக்கு குறைவாக ஆட்டமிழந்துள்ளார்.
ரோஹித் இந்த ஆண்டு 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 10.93 சராசரியுடன் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார், அவர் 15 முறை ஒற்றை இலக்க எண்ணிக்கையை தாண்ட முடியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
india australia, Yashasvi Jaiswal, Jasprit Bumrah, IND Vs AUS 4th Test Records, India-Australia Border-Gavaskar Trophy