தொடங்கியது உலகக்கோப்பை இறுதிப் போட்டி! இந்திய அணி முதலில் பேட்டிங்
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியுள்ளது.
அகமதாபாத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியுள்ளது.
Twitter
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்வதாக கூறினார்.
Dry விக்கெட் மற்றும் பனி காரணியால் இந்த முடிவை எடுத்தாக அவர் கூறினார். மேலும் அணியில் மாற்றங்கள் இல்லை என குறிப்பிட்டார்.
அதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அரையிறுதியில் விளையாடிய அதே அணியுடன் தொடர்வதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |