அபிஷேக்கின் அதிரடி சதம்., 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது.
அபிஷேக் ஷர்மாவின் அதிரடி சதம் இந்தியா ஐந்தாவது டி20 போட்டியை வெல்ல உதவியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபிஷேக் 135 ஓட்டங்கள் எடுத்தார், இது ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச டி20 ஸ்கோராகும்.
அபிஷேக் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து தரப்பில் பில் சால்ட் 55 ஓட்டங்களும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ஆம் திகதி தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs England 5th T20I, Abhishek Sharma, Abhishek Sharma record score