உலக சாதனை படைத்த விராட் கோலி: ஒருநாள் போட்டியில் 50வது சதம் அடித்து அசத்தல்
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்து விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து-இந்தியா மோதல்
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை வைத்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து சவுதி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால் ஆட்டத்தின் வேகத்தை குறைக்காத மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் 65 பந்துகளில் 79 ஓட்டங்கள் அதிரடியாக குவித்தார்.
ஆனால் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வு பெற்று பெவிலியன் திரும்பினார்.
உலக சாதனை படைத்த விராட் கோலி
இந்திய அணி ரன் வேட்டை சிறிதும் குறைத்து கொள்ளவில்லை, பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
special just special????
— ? (@roselacentt) November 15, 2023
[ #ViratKohli #KingKohli #INDvsNZ ] pic.twitter.com/CnBHfpIDzA
106 பந்துகளை எதிர்கொண்ட இருந்த போது விராட் கோலி தன்னுடைய 50வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். இறுதியில் 113 பந்துகளை எதிர்கொண்டு இருந்த விராட் கோலி 117 ஓட்டங்கள் குவித்து சவுதி பந்தில் விக்கெட்டை இழந்தார்.
கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிட்ச்: இந்தியா-நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் வெடித்துள்ள சர்ச்சை
நியூசிலாந்து-இந்தியா போட்டியில் 44 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |