அதிரடி காட்டிய இந்திய அணி வீரர்கள்: 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி!
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
22 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்து இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அசத்தல்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவிற்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் எதிரான இரண்டாவது டி20 போட்டி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.
This is a David Miller Appreciation Tweet™️
— Star Sports (@StarSportsIndia) October 2, 2022
2nd Mastercard T201 #INDvSA | #DavidMiller pic.twitter.com/IlybobYhrC
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து சுமார் 237 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர்களான ராகுல் 57 ஓட்டங்கள், கேப்டன் ரோஹித் 37 ஓட்டங்கள், கோலி 49 ஓட்டங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்கள் குவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து 238 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக தொடக்க வீரரான டெம்பா பவுமா மற்றும் ரிலீ ரோசோவ் இருவரும் ஒட்டங்கள் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர்.
ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டு ஓட்டங்களை மழமழவென சேர்க்க தொடங்கினர்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 106 ஓட்டங்கள் சேர்த்தார், அத்துடன் குயின்டன் டி காக் 69 ஓட்டங்களும், சேர்த்து இருந்தார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணியால் 3 விக்கெட்களை விட்டுக் கொடுத்து 221 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 60,000 ரஷ்ய வீரர்கள் இனி உக்ரைன் போரில் இல்லை: பெரும் பின்னடைவில் புடின் படை
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக 28 பந்துகளில் 57 ஓட்டங்கள் சேர்த்த கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.