டி20 போட்டியில் இலங்கையுடன் மோதும் இந்திய அணி - இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிலையில் கேஎல் ராகுல், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் விலகியுள்ளதால் இப்போட்டியில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேசமயம் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா கொரோனாவில் இருந்து மீளாததால் இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.