இந்தியாவிற்கு எதிராக இருமுறை விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை வீரர்: ஜடேஜா பந்துவீச்சில் நடந்த சுவாரஸ்யம்!
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கேப்டன் கருணரத்னே அடுத்தடுத்த பந்தில் இருமுறை விக்கெட்டை பறிகொடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 574 ரன்கள் குவித்திருந்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர்கொள்ளவே, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக பந்துவீச்சை சுழற்பந்திற்கு மாற்றினார்.
அதைத்தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரியவே 24-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா வீசினார், அந்த ஓவரில் அடுத்தடுத்து வீசிய பந்தில் இலங்கை கேப்டன் கருணரத்னே இருமுறை விக்கெட்டை பறிகொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
அந்த ஓவரில் ஜடேஜா வீசிய முதல் பந்து off side-ல் சுழன்று இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பேட்டில் படாமல் காலில் பட்டது, இதற்கு விக்கெட் தர நடுவர் மறுக்கவே, இந்திய அணியும் பல ஆலோசனைகளுக்கு பிறகு டிஆர்எஸ் முறையை பயன்படுத்தாமல் கைவிட்டனர்.
ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த ரீப்ளேவில் அது அவுட் என தெரியவந்தது.
இதையடுத்து அதற்கு அடுத்த பந்தையும் அதே போன்றே ஜடேஜா மறுபடியும் வீசவே இலங்கை கேப்டன் கருணரத்னேவின் பேட்டில் சிக்காமல் அவர் மீண்டும் காலில் பட்டது.
கடந்த முறை விக்கெட் தரமறுத்த நடுவர், இந்த முறை இலங்கை வீரர் கருணரத்னேவிற்கு அவுட் கொடுத்தார்.
இதனை ஏற்க மறுத்த இலங்கை வீரர் கருணரத்னேவோ நடுவரின் முடிவுவை எதிர்த்து டிஆர்எஸ் முறையை பயன்படுத்தினார்.
ஆனால் அந்த மூன்றாம் நடுவரின் மறு ஆய்விலும் அவுட் என தெரியவரவே, அடுத்தடுத்த பந்தில் இலங்கை வீரர் கருணரத்னே இருமுறை விக்கெட்களை இழந்த சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.