இலங்கையுடனான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி இதுதான்...!
இந்தியா இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இப்போட்டிக்காக உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்கவுள்ளது. இப்போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இப்போட்டியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா, ரஹானே, புவனேஷ்வர் குமார் போன்றவர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அணியில் இடம்பிடிக்க போராடுவார்கள். மேலும் புஜாராவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரும், ரஹானேவிற்கு பதிலாக ஹனுமா விஹாரிக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்திய உத்தேச அணியில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.