முதல் பந்திலேயே ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் - கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கிடைத்த அரிய வாய்ப்பை மோசமாக விளையாடிய சஞ்சு சாம்சன் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் மீது எழும் கடும் விமர்சனம்
நேற்று பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைானத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கேரள வீரர் கோல்டன் டக் அவுட்டானதை அடுத்து சஞ்சு சாம்சன் மீது கடும் விமர்சனம் இணையத்தில் பரவியது.
போட்டியில் காயமடைந்த ஷுப்மான் கில்லிற்குப் பதிலாக 29 வயதான சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
ஆனால் அவர் தனது அரிய வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.
162 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட ஆரம்பித்தது.
முதல் ஓவரில் மூன்று பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் போட்டி தாமதமானது.
மழை நின்றதையடுத்து, எட்டு ஓவர்களில் 74 ஓட்டங்கள் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவிடம் நேரடியாக ஆட்டமிழந்தார்.
இதையடுத்து , "அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளில் சஞ்சு சாம்சன் மோசமாக விளையாடி வருகிறார். அதிலும் முதல் பந்தில் இவ்வாறு ஆட்டமிளந்ததை எல்லாம் மன்னிக்கவே முடியாது." என இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |