டி20 தொடரை வெல்லுமா இந்தியா? - இன்று இரண்டாவது போட்டியில் மோதல்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணியிடம் முழுமையாக இழந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது போட்டி இன்று நடக்கவுள்ளது.
இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், டி20 தொடரை இழக்கக் கூடாது என வெஸ்ட் இண்டீஸூம் மல்லுக்கட்டும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.