55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: ஆசியக் கிண்ணத்தில் சம்பவம் செய்த இந்திய வீராங்கனைகள்
India women team beat pakistan by 7 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.
55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்
55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் 9வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் நேற்று மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஷாவால் 14 ஓட்டங்களும், முனீபா அலி 13 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனைய 9 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரீசரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |