4 விக்கெட், அரைசதம்: ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்ட்யா! இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா
சவுதம்டானில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று தொடங்கியது. துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 14 பந்துகளில் 24 விளாசி வெளியேறினார்.
இஷான் கிஷன் 8 ஓட்டங்களில் வெளியேற, தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஹூடா 17 பந்துகளில் (2 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) 33 ஓட்டங்களும், சூர்யாகுமார் 19 பந்துகளில் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) 39 ஓட்டங்களும் எடுத்தது ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பட்லர் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டானார். ராய், லிவிங்ஸ்டன் என அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் அவுட் ஆகினர். எனினும், டேவிட் மாலன் 14 பந்துகளில் 21 ஓட்டங்களும், புரூக் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Twitter(@ICC)
மெயின் அலி அதிரடியாக 20 பந்துகளில் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) 36 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கடைசி வரை களத்தில் நின்ற ஜோர்டன் 17 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: BCCI
துடுப்பாட்டத்தில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சிலும் கலக்கினார். அவர் 4 விக்கெட்டுகளையும், சஹால் மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.