இலங்கையை ஊதி தள்ளி 8வது முறை ஆசிய கோப்பை சாம்பியனாக முடிசூடியது இந்தியா!
2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8வது முறை சாம்பியனாக முடிசூடியது இந்தியா.
டிசம்பர் 31ம் திகதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 38 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இலங்கை அணியில் Yasiru Rodrigo அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 19 எடுத்திருந்தார். இந்திய தரப்பில் பந்து வீச்சில் Vicky Ostwal அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து, டக்வர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 102 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 21.3வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று சாம்பியனாக முடிசூடியது.
இந்திய வீரர் Angkrish Raghuvanshi இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
WHAT. A. WIN! ☺️ ?
— BCCI (@BCCI) December 31, 2021
India U19 beat Sri Lanka U19 by 9⃣ wickets to clinch the #ACC #U19AsiaCup title. ? ? #BoysInBlue #INDvSL
Scorecard ▶️ https://t.co/GPPoJpzNpQ
? ?: ACC pic.twitter.com/bWBByGxc3u
இதன் மூலம் 1989 முதல் 2021 வரை மொத்தம் 9 முறை நடந்துள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை அதிகபட்சமாக இந்திய 8 முறை வென்றுள்ளது, ஆப்கானிஸ்தான் ஒரு முறை வென்றுள்ளது,
INDIA WIN THE U19 ASIA CUP FOR THE 8TH TIME!!#ACC #U19AsiaCup #SLVIND pic.twitter.com/6KenITTvow
— AsianCricketCouncil (@ACCMedia1) December 31, 2021
2012ல் இறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.