குல்தீப் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா: 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்க அணியை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
3வது டி20 போட்டி
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 3வது டி20 போட்டியில் இன்று விளையாடியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 12 ஓட்டங்களிலும், திலக் வர்மா(0) ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்கள்.
ஆனால் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசி இந்திய அணியின் ஓட்டங்கள் விகிதத்தை நிலைப்படுத்தினார்.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால், 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் விளாசி சதத்தை(100) பூர்த்தி செய்தார்.
x/ICC
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா அபார வெற்றி
இதையடுத்து சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ரீசா ஹென்ரிக்ஸ் 8 ஓட்டங்களிலும், மத்தேயு ப்ரீட்ஸ்கே 4 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
பின்னர் வந்த வீரர்களும் யாரும் பெரிய அளவிலான ஓட்டங்களை குவிக்க தவறியதால் தென்னாப்பிரிக்க நிலை தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் தன்னுடைய பங்கிற்கு 35 ஓட்டங்கள் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்கள் முடிவிலேயே 95 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 3வது டி20 போட்டியில் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: 20 வருடங்கள் சிறை தண்டனைக்கு பிறகு தெரியவந்த உண்மை
Honours shared in the T20I series after India produced a sublime all-round performance in the final match against South Africa ?
— ICC (@ICC) December 14, 2023
? #SAvIND: https://t.co/ytix3VV4Cb pic.twitter.com/JjbbjmzHrd
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
மீதமுள்ள இரண்டு போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும், இந்தியா அணி ஒரு வெற்றியை பெற்று இருப்பதால் தொடர் சமனில் முடிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.Kuldeep Yadav