நியூசிலாந்தை சுக்குநூறாக நொறுக்கிய இருவர்! 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி..தொடரை கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இறுதிப் போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் குவித்தது.
கில் மிரட்டல்
ருத்ரதாண்டவம் ஆடிய தொடக்க வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும். திரிபாதி 44 ஓட்டங்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 30 ஓட்டங்களும் குவித்தனர்.
நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், சோதி, மிட்செல் மற்றும் டிக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 7 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் மிட்செல் மட்டும் போராட, மறுபக்கம் சொற்ப ஓட்டங்களில் வீரர்கள் வெளியேறினர்.
Umran Malik comes into the attack and Michael Bracewell is bowled for 8 runs.
— BCCI (@BCCI) February 1, 2023
A beauty of a delivery from Umran ?
Live - https://t.co/1uCKYafzzD #INDvNZ @mastercardindia pic.twitter.com/nfCaYVch4b
தெறிக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா
துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக், பந்துவீச்சில் நியூசிலாந்தை நிலைகுலைய வைத்தார். மேலும் அர்ஷ்தீப், உம்ரான், மாவி ஆகியோரும் பந்துவீச்சில் மிரட்டியதால் நியூசிலாந்து 12.1 ஓவரில் 66 ஓட்டங்களும் சுருண்டது.
Shubman's Gill's terrific century has helped India post a mammoth total in Ahmedabad ?#INDvNZ | ?: Scorecard: https://t.co/CR0CCRQLex pic.twitter.com/sF70YLZXo8
— ICC (@ICC) February 1, 2023
அதிகபட்சமாக மிட்செல் 35 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
As comprehensive as it gets ?
— ICC (@ICC) February 1, 2023
India clinch the series 2-1 against New Zealand after a dominant display in Ahmedabad! #INDvNZ | ?: Scorecard: https://t.co/CR0CCRQdoZ pic.twitter.com/naNCNERIpN