சுதந்திர தினம் 2024: பல போராட்டத்தின் பின் கிடைத்த சுதந்திர வெற்றியின் வரலாறு
இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை இன்று ஆகஸ்ட் 15, 2024 அன்று கொண்டாடுகிறது. இது நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கும்.
சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 15, 1947 அன்று பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றதை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் தற்போது சுதந்திர காற்றைச் சுவாசித்துக்கொண்டிருப்பதற்கு அன்றைய காலக்கட்டத்தில் போராடிய அனைத்து வீரர்களுக்கும் இன்றைய நாளில் மிகப்பெரிய நன்றியை தெரிவிக்க வேண்டும்.
வரலாற்றுப் பின்னணி
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பல ஆண்டுகளாக இடைவிடாத முயற்சியால் இந்தியாவின் சுதந்திரப் பயணம் ஆரம்பித்தது.
அவர்களின் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர் தலைமையிலான அகிம்சை எதிர்ப்புகள் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் இரண்டும் அடங்கும்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா இறுதியாக சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் ஜவஹர்லால் நேரு முதல் பிரதமரானார்.
அவரது புகழ்பெற்ற பேச்சு, ‘Tryst with Destiny’ இந்தியாவுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவம்
சுதந்திர தினம் என்பது இந்திய மக்களின் பிரதிபலிப்பு மற்றும் பெருமைக்குரிய நாளாகும்.
தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய எண்ணற்ற தனிநபர்களின் தியாகங்கள் இந்நாளில் தேசத்திற்கு நினைவூட்டப்படுகிறது.
ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் நாட்டின் பெருமை போன்ற இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள கொள்கைகளையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
2024 சுதந்திர தினத்திற்கான கருப்பொருள்
இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘Viksit Bharat’ என்று கூறப்படுகிறது. அதாவது இது 'வளர்ந்த இந்தியா' என்று கூறப்படுகிறது. பாரம்பரியமாக, டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி 11 வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்துள்ளார்.
செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும் கடுமையான போராட்டம் மூலம் கிடைத்த வெற்றியை மிக விமர்சையாக ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |