இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு... 2024ல் முதன்முறையாக
முதன்முறையாக, இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு டிரில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது.
பெரும் ஆதாயம்
2024ல் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில். அவர்களின் மொத்த சொத்து மதிப்பானது இந்த ஆண்டு 40 சதவிகிதம் உயர்ந்து 1.1 டிரில்லியன் டொலராக பதிவாகியுள்ளது,
இது 2023ல் 799 பில்லியன் டொலர்களாக இருந்தது. இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பது பெரும்பாலும் வலுவான பங்குச் சந்தை செயல்பாடு காரணமாகும், மட்டுமின்றி முதலீட்டாளர்கள் ஐபிஓக்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பேர்களில் 80 சதவிகிதத்தினர் சமீபத்தில் பெரும் ஆதாயம் பெற்றுள்ளனர். இதில் 58 பேர்கள் தங்கள் சொத்தில் 1 பில்லியன் டொலர் அல்லது அதற்கு மேலும் சேர்த்துள்ளனர்.
குறித்த பட்டியலில் முதலிடத்தில் வழக்கம்போலவே முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் இருந்து 27.5 பில்லியன் டொலர் அதிகரித்து, தற்போது 119.5 பில்லியன் டொலராக உள்ளது.
அதானி குடும்பம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 48 பில்லியன் டொலர் அதிகமாக சம்பாதித்து, மொத்த சொத்து மதிப்பு 116 பில்லியன் டொலர் என பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு சிறு பின்னடைவை எதிர்கொண்ட அதானி குழுமம், மிக வேகமாக அந்த சரிவில் இருந்து மீண்டுள்ளது. மூன்றாவது இடத்திற்கு ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் முன்னேறியுள்ளார்.
முதல் 10 இடங்களில்
கடந்த ஆண்டில் இருந்து 19.7 பில்லியன் டொலர் அதிகரித்து, தற்போது அவர்களின் சொத்து மதிப்பு 43.7 பிப்பியன் டொலராக உள்ளது. நான்காவது இடத்தில் 40.2 பில்லியன் சொத்து மதிப்புடன் ஷிவ் நாடார் உள்ளார்.
ஜிண்டால் மற்றும் ஷிவ் நாடார் உட்பட 6 கோடீஸ்வரர்கள் இணைந்து தங்கள் சொத்து மதிப்பில் 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இந்த ஆண்டு சேர்த்துள்ளனர்.
ஐந்தாவது இடத்தில் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனரான Dilip Shanghvi உள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது 32.4 பில்லியன் டொலராக உள்ளது.
இந்தியாவில் முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்ரி ஜிண்டால், ஷிவ் நாடார், திலீப் ஷங்வி, ராதாகிஷன் தமானி, சுனில் மிட்டல், குமார் பிர்லா, சைரஸ் பூனவல்லா மற்றும் பஜாஜ் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |