ரோகித் டக் அவுட்...இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய கோலி! பாகிஸ்தான் அதிரடியுடன் ஆரம்பம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் இரண்டாம் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் ஆடி வரும் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 எடுத்தது. இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா டக் அவுட், கே.எல்.ராகுல் 3 ஓட்டம், அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 என அடுத்தடுத்து வெளியேற, கோலி மற்றும் ரிஷப் பாண்ட் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் என தடுமாறி வந்த இந்திய அணி ஒரு வலுவான இலக்கை நோக்கி நகர்ந்தது.
ரிஷப் பாண்ட் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அதன் பின் வந்த வீரர்களும் சொதப்ப, கோலி மட்டும் தனி ஒருவனாக பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு அரைசதம் அடித்தார்.
49 பந்தில் 57 ஓட்டங்கள் அடித்த அவர் ஷகின் அப்ரிடி பந்து வீச்சில் அவுட் ஆக, இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 31 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.
அதன் பின் 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 3.4 ஓவரில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அந்தணியின் கேப்டன் விராட் கோலி 48 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறார்.