அவுஸ்திரேலியாவின் புயல்தாக்குதலில் மொத்தமாக சுருண்ட இந்திய அணி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
போலண்ட் மிரட்டல்
சிட்னியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது. ஸ்டார்க்கின் புயல்வேகத்தில் கே.எல்.ராகுல் 4 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அடுத்து ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் போலண்ட் ஓவரில் வெளியேறினார். பின்னர் கில் 20 ஓட்டங்களிலும், விராட் கோஹ்லி 17 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிஷாப் பண்ட் 40
ஓரளவு நின்று ஆடிய ரிஷாப் பண்ட் 40 (98) ஓட்டங்கள் எடுத்த நிலையில் போலண்ட் ஓவரில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி முதல் பந்திலேயே போலண்ட் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அணித்தலைவர் பும்ரா அதிரடியாக 22 (17) ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸ்காட் போலண்ட் (Scott Boland) 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுக்கு 9 ஓட்டங்கள் எடுத்தது.
Innings Break!#TeamIndia post 185 in the 1st innings at the Sydney Cricket Ground.
— BCCI (@BCCI) January 3, 2025
Over to our bowlers.
Live - https://t.co/NFmndHLfxu#AUSvIND pic.twitter.com/1585njVwsn
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |