மாயாஜால சுழலில் இந்திய அணியை சுருட்டிய ஷகிப் அல் ஹசன்!
டாக்காவில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வங்கதேசத்தின் மிரட்டல் பந்துவீச்சு
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தவான், கோலி ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் 27 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஷகிப் அல் ஹசன் தனது அபாரமான சுழற்பந்து வீச்சினால் இந்திய அணியின் விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது பந்துவீச்சில் ரோகித், கோலி ஒரே ஓவரில் அவுட் ஆன நிலையில், வாஷிங்டன் சுந்தரை 19 ஓட்டங்களில் வெளியேறினார்.
@ICC
கே.எல்.ராகுல் அரைசதம்
கே.எல்.ராகுல் மட்டும் ஒருபுறம் போராட ஏனைய விக்கெட்டுகளை ஷகிப் மற்றும் எபடோட் ஹொசைன் ஆகிய இருவரும் கைப்பற்றினர். அணியின் ஸ்கோர் 178 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
@AFP
கடைசி விக்கெட்டாக சிராஜ் (9) ஆட்டமிழந்ததால் இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சுருண்டது. வங்கதேச அணியின் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், ஹொசைன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@AP/PTI
@AFP
@Bangladesh Cricket Board/Twitter