விண்ணில் பாய உள்ள இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் VIKRAM-1
இந்தியாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அனைத்தும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) ராக்கெட்கள் மட்டுமே ஏவப்பட்டு வந்தது.
தற்போது இந்தியாவின் முதல் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் VIKRAM-1 விண்வெளியில் ஏவப்பட்ட உள்ளது.
விண்ணில் பாய உள்ள VIKRAM-1
2018 ஆம் ஆண்டில் 2 முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஹைதராபாத்தை தளமாக கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்(Skyroot Aerospace) நிறுவனம் தொடங்கப்பட்டது.

இது இந்தியாவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப யூனிகார்ன் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தின் VIKRAM-1 என்ற ராக்கெட் ஜூலை 12 மற்றும் ஆகஸ்ட் 4 க்கு இடைப்பட்ட ஒரு நாளில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்ட உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் விண்வெளிப் பயணத்திற்கு சமஸ்கிருத மொழியில் 'வருகை' என்று பொருள்படும் 'ஆகமன்' (Aagaman) என்று பெயரிடப்பட்டுள்ளது.
🚀 Announcing Vikram-1 Test Flight-1: Mission Aagaman, India’s first private orbital rocket launch.
— Skyroot Aerospace (@SkyrootA) July 2, 2026
📍 Satish Dhawan Space Centre, Sriharikota
🛰️ 450 km, 60 degree inclination, Low Earth Orbit
📅 Launch Window: July 12 – August 4, 2026
Vehicle is now fully stacked at India’s… pic.twitter.com/mqqJnO5RoI
விக்ரம்-1 என்பது ஸ்கைரூட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, கார்பன் ஃபைபர் பொருளால் ஆன ஏழு அடுக்கு உயர ராக்கெட் ஆகும்.
இது 350 கிலோகிராம் வரையிலான செயற்கைக்கோள் சுமைகளை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு சுமந்து செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2026 மற்றும் அதற்கடுத்த ஆண்டில் 3 அல்லது 4 சோதனைப் பயணங்களுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டில் வணிக ரீதியான ஏவுதல்களுக்குத் தயாராக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
900 கிலோ என்ற அதிக சுமை தாங்கும் திறன் கொண்ட கிரையோஜெனிக் எஞ்சினை பொருத்தியிருக்கும் விக்ரம்-2 ராக்கெட்டையும் உருவாக்கி வருகிறது.
"விக்ரம்-1 ராக்கெட்டில் உள்ள ஒவ்வொரு அமைப்பிலிருந்தும், பறக்கும்போது அதன் உண்மையான செயல்திறன் தரவுகளைச் சேகரிப்பதே 'மிஷன் ஆகமன்' திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும்.

ராக்கெட் புறப்பட்டது முதல் மேலேறும் ஒவ்வொரு கட்டம் வரையிலும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள விரும்புகிறோம்" என்று ஸ்கைரூட் இணை நிறுவனர் சந்தனா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |