இந்தியாவின் முதல் கடலடி ரயில் சுரங்கப்பாதை - மஹாராஷ்டிராவில் அமைகிறது
Indias first undersea rail tunnel to be in maharastra: மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில், 7 கி.மீ தூரத்திற்கு இந்தியாவின் முதல் கடலடி ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
புல்லட் ரயில் திட்டம்
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், 2027 ஆம் ஆண்டில் முதற்கட்ட பயன்பாட்டிற்கும் வரும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

508 கி.மீ நீளமுள்ள இந்த மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தில், 2027 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயணம் சூரத்திலிருந்து வாபிக்கு இயக்கப்படும்.
இதில், தானே க்ரீக்கின் அடியில் உள்ள சுரங்கப்பாதை, மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தை (பி.கே.சி.) தானேவின் ஷில்பாட்டா பகுதியுடன் இணைக்கும்.
முதல் கடலடி ரயில் சுரங்கப்பாதை
இந்த வழித்தடம் 21 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாகச் செல்கிறது என்றும், அதில் 7 கி.மீ பகுதி தானே க்ரீக்கிற்கு அடியில் கடலுக்கு அடியில் செல்கிறது.

இந்தச் சுரங்கப்பாதை, தரை மற்றும் கடல் மட்டத்திற்குக் கீழே சுமார் 25 முதல் 55 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நாட்டின் முதல் கடலடி ரயில் சுரங்கப்பாதையை அமைப்பதற்காக, 3,200 டன் எடை கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஒன்று தற்போது தானே சிற்றாற்றின் அடியில் உள்ள பாறையைத் துளைத்து வருவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலத்தடி நிலையம், நடைமேடைகள், பயணிகள் கூடம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை உள்ளடக்கிய3 அடுக்குகளைக் கொண்டிருக்கும்.
அதன் 6 நடைமேடைகளில் ஒவ்வொன்றும் 400 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாக இருக்கும், இது அதிவேக ரயில்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அமையும்.