கிராமத்தில் பிறந்து இந்தியாவின் 2வது பணக்காரரான நபர் - ரூ.46 ஆயிரம் கோடி சாம்ராஜியத்தை உருவாக்கியது எப்படி?
உலகளவில் பல பணக்காரர்கள் உள்ளன. அதிலும் சிறு தொழில்கள் செய்து பணக்காரர் ஆனவர்களின் கதை அதிகம். அதில் ஒருவர் தான் MA யூசுப் அலி.
யார் இந்த MA யூசுப் அலி?
MA யூசுப் அலி சில்லறை வர்த்தகத்தில் பிரபலமான கோடீஸ்வரர் ஆவார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர். 67 வயதான இவர் லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
குழுமம் உலகளவில் லுலு ஹைப்பர்மார்க்கெட் ( LuLu Hypermarket) மற்றும் லுலு இன்டர்நேஷனல் ஷாப்பிங் மால் (LuLu International Shopping Mall) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் ஆண்டு வருவாய் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 65800 கோடி ஆகும்.
இவர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகாவில் பிறந்தார்.
வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் டிப்ளமோ பெற்றார். யூசுப் அலி தனது மாமாவின் சிறு விநியோகத் தொழிலில் சேருவதற்காக 1973 இல் அபுதாபிக்குப் புறப்பட்டார்.
1990களில் தனது முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட்டைத் திறந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட லுலு குழுமம் வளைகுடாவில் பிரபலமான ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகள் மூலம் பிரபலமானது.
இந்நிலையில் தற்போது இவருடைய முழு சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகர மதிப்பு
2023 நிலவரப்படி யூசுப் அலியின் நிகர மதிப்பு 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது சுமார் ரூ.46,060 கோடி ஆகும்.
இவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 500வது இடத்தில் உள்ளார். ராதாகிஷன் தமானிக்குப் பிறகு fashion மற்றும் சில்லறை விற்பனைத் துறையில் இந்தியாவின் இரண்டாவது பணக்கார பில்லியனர் ஆனார்.
கோவிட் காலத்தில், தொற்றுநோயை எதிர்த்துப் போராட அவர் 6.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |