கடைசி கட்டத்தில் தனி ஒருவனாக கலக்கிய இந்திய வீரர்! 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து வீரர்: அனல் பறக்கும் முதல் டெஸ்ட்
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் பும்ரா மற்றும் மொகமது ஷமியின் அசுர வேக பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 183 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதில் ரோகித் சர்மா(36) மற்றும் கே.எல்.ராகுல்(84) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்பிய போது, தனி ஒருவனாக ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 250 ஓட்டங்களை கூட தாண்டுமா என்ற போது, இவரின் நேர்த்தியான ஆட்டத்தால், இந்திய அணி இறுதியாக 278 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 86 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 95 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளதால், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்கள் எடுத்து வருகிறது. இங்கிலாந்து அணியில் முதல் இன்னிங்ஸில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும், ஒலி ராபின்சன் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.