இந்தியாவில் தொற்று குறைந்தாலும், மரண ஓலம் குறையவில்லை!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70,421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29,510,410-ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், நேற்று ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,74,305-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,19,501 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,162,947-ஆக உயர்ந்துள்ளது.
72 நாட்களுக்குப்பிறகு நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு கீழாக குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 9,73,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.