இமயமலையில் ரஜினிகாந்தின் சுதந்திர தின கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை இமயமலையில் கொண்டாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரஜினிகாந்த்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் திரைக்கு வந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சுனில் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
மேலும் படத்தின் வெளியீடுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் இமயமலைக்கு புற்ப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
குறிப்பாக இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் படப்படிப்பு முழுவதுமாக முடிவடைந்தவடன் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த்
ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டு நண்பர்களுடன் சென்றுள்ளார். ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று ரிஷிகளிடம் உரையாடியுள்ளார்.
பின் உத்தரகண்ட்டில் வியாசர் குகை மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிப்பட்டுள்ளார். துவாரஹட்டில் உள்ள குக்குச்சினா என்ற மலை கிராமத்தில், மகாவதார் பாபாஜி குகை சென்றுள்ளார்.
சுதந்திர தினத்தை கொண்டாடிய ரஜினிகாந்த்
77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்தியப்படி கொண்டாடியுள்ளார். அவருடன் இருந்த சிலரும் இதில் கலந்துக்கொண்டுள்ளார்கள்.
பண உதவி
55 நாட்கள் நடந்து பாபாஜி குகைக்கு வந்த சென்னை இளைஞர் ஒருவர் ரஜினியை சந்தித்துள்ளார்.
அவருக்கு பண உதவி செய்து கடும் குளிரில் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, இப்போது ஒரு சாமியாருடன் சிறிய இடத்துக்கு மாற்றியுமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |