10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணி தோல்வி: முடித்துவிட்ட சாய் சுதர்ஸன்
காலியில் நடந்த டெஸ்டில் இந்தியா ஏ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தியது.
காலி டெஸ்ட்
இலங்கை ஏ மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலியில் நடந்தது.
இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களும், இந்தியா ஏ அணி 543 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை ஏ அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அஷென் பந்தரா (Ashen Bandara) 87 ஓட்டங்களும், கேஷாரா நுவந்தா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய குர்நூர் பிரார் 6 விக்கெட்டுகளும், சரன்ஷ் ஜெயின் 2 விக்கெட்டுகளும், ஆக்கிப் மற்றும் யஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
32 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் சாய் சுதர்சன் 25 ஓட்டங்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் அவர் 168 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |